ஜூன் 30 வரை முழு ஊரடங்கா? என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?
இதில் திருமணம் என்ற காரணத்தைச் சொல்லி பலரும் தவறாக இ பதிவு முறையை பயன்படுத்துவதால் அந்த ஆப்ஷன் மட்டும் நேற்று நீக்கப்பட்டது. பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் சேர்க்கப்பட்டது. ஆனால் மறுபடியும் அந்த முறை நீக்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ பதிவு முறை அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று காவல் எல்லையைக் கடந்து செல்ல இ பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் கொரோனா இலவசமா?
கொரோனா பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் அதை சமாளிக்க மளிகைப் பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அத்துடன் முதல் தவணையாக மே மாதத்துக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் இதை வாங்குவதற்காக மக்கள் பல இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் ஒன்று கூடுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
கடைகள் திறப்பு நேரம் நீட்டிக்கப்படுமா?
காலை 8 மணி முதல் 10 மணி வரை கடைகள் இயங்கி வரும் நிலையில் திறந்திருக்கும் நேரத்தை பகல் 12 மணி வரை நீட்டிக்க வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றுமா, மே 24க்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தால் ஊரடங்கு தளர்வு இப்போதைக்கு இல்லை என்றே பலரும் கூறுகின்றனர்.
மேலும் 14 நாள்கள் ஊரடங்கா?
தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பரவல் வேகம் ஊரடங்குக்குப் பின் சற்று குறைந்ததாக கூறப்பட்டாலும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடியே வருகிறது. 14 நாள்கள் ஊரடங்கு என்பது நேர்மறையான பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடாது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. இதனால் தமிழக அரசும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கும் என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை