தமிழகத்தில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்குமா? – முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு செயல்பாடுகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
முழு ஊரடங்கு செயல்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்குகிறது. இதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மே 10 முதல் 24 வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் குறையாத காரணத்தால் மே 24 முதல் மே 31 வரை தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியே வராமல் இருக்க ஆங்காங்கே கண்காணிப்பு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் மீண்டும் முழு ஊரடங்கு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
கருத்துகள் இல்லை