தமிழக பள்ளிக் கல்வித்துறை சீரமைப்பு பணிகள் – அரசு தீவிரம்!!
பள்ளிக்கல்வித்துறையில் தற்போதைய தமிழக அரசு புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறையை சீரமைப்பதில் அரசு தீவிரம் காட்டி வருவது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை சீரமைப்பு:
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைந்த புதிய அரசு பள்ளிக்கல்வித்துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறையை சீரமைக்கும் பணியை துவக்கி, பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டும் தமிழகத்தில் கல்வியின் தரத்தை உயர்த்தவும் இந்த மாற்றங்கள் உதவும் என் அரசு தெரிவிக்கிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் என்ற பதவி நீக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அரசு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது. தமிழகத்தின் பொது சேவை செயலாளராக இருந்த கே.நந்தகுமார் பள்ளிக்கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முறையை பலரும் வரவேற்றுள்ளனர். இருப்பினும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறையில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் போன்றோரை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் இயக்குனர்.
இந்த பதவியை நீக்குவது நல்லதல்ல என பொது செயலாளர் பேட்ரிக் ரேமண்ட் தெரிவித்துள்ளார். இந்த புதிய பள்ளிக் கல்வித்துறை குறித்து கருத்து தெரிவித்துள்ள கல்வியியலாளர் ஒருவர் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவி என்பது அனைத்து அதிகாரங்களுடன் இருக்கும் ஐ.ஏ.எஸ் கேடர் பதவி என்றும் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த முடிவை திரும்ப பெறும் படி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை