அரசு D பிரிவு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் பொங்கல் கருணைத்தொகை வழங்க அரசுக்கு கோரிக்கை
அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் பொங்கல் கருணைத்தொகை வழங்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க ஊழியர்கள் கலந்து கொண்ட மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடந்த டிச.11ம் தேதியன்று நடைபெற்றது. அந்த வகையில் சேலம் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய தலைவர் கணேசன் இக்கூட்டத்தில் விரிவுரையாற்றினார்.
தொடர்ந்து வரும் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.10,000 கருணைத்தொகை வழங்குவது, D பிரிவு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்துவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது, சுகாதாரத்துறையில் தற்காலிக மஸ்தூர் பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்குவது, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குவது, சரண்டர் விடுப்பு தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை முன்னிறுத்தி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை