Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்து புதிய அறிவிப்பு, வரும் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படலாம்..?

கடந்த அதிமுக ஆட்சியில் நிதிப் பற்றாக்குறையால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறக்கூடிய வயது 60ஆக நீட்டிக்கப்பட்டது. 2021இல் திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் பழைய பென்ஷன் திட்டம் மற்றும் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணப்பலன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அகவிலைப்படி 11% உயர்வையும் ஓராண்டிற்கு தள்ளி வைத்தார்.  இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்றொரு பக்கம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்க காலியிடங்களை நிரப்பாமல் அரசு தவிர்த்து வருகிறது என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இந்த நிலையில் வரும் 2022 ஜனவரி மாதம் 5ஆம் தேதி கூடும் தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயது தொடர்பாக, தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிடலாம், அதன்படி 33 வருடங்கள் அரசு பணி செய்தவர்கள் 58 வயதிலும், மற்றவர்கள் 60 வயதிலும் ஓய்வு பெறலாம் என்று அறிவிக்கப்படலாம் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமல்ல... “நிதி சுமையால்தான் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை உயர்த்தியது, தற்போது ஓய்வு பெறும் வயதை 58ஆகக் குறைத்தால் பல ஆயிரம் பேர் ஓய்வு பெறுவார்கள். அவர்களுக்குப் பணப்பலன் எப்படிக் கொடுப்பது என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது. அனைவருக்கும் பாண்ட் பத்திரம் கொடுத்து அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றும் கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்து புதிய அறிவிப்பு, வரும் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படலாம்..? அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்து புதிய அறிவிப்பு, வரும் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படலாம்..? Reviewed by Rajarajan on 15.12.21 Rating: 5

கருத்துகள் இல்லை