Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நாம் அறிந்த ரத்தன் டாடாவின் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்

 


ரத்தன் நேவல் டாடா இந்தப் பெயரை தெரியாதவர்களை இந்தியாவில் இருக்க முடியாது, டாடா குழுமம் என்ற மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜியத்தை மிகப்பெரிய உச்சத்திற்குக் கொண்டு சென்ற இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர் ஆவார்.

இவருடைய சாதனைகளையும், பெருமைகளையும் பேச இந்த ஒரு நாள் போதாது என்ற அளவிற்கு ரத்தன் டாடா பல விஷயங்களைச் செய்துள்ளார். இப்படி ரத்தன் டாடா குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை அவரது 84வது பிறந்த நாளில் பார்ப்போம்.

1937 - ரத்தன் டாடா

டாடா என்னும் மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஜாம்செட்ஜி டாடாவின் தத்து பேரப்பிளையான நேவல் டாடா-வின் மகனாக 1937 ஆண்டு ரத்தன் டாடா பிறந்தார்.

பாட்டி வளர்ப்பு

ரத்தன் டாடா 10 வயதாக இருக்கும் போதே அவரது பெற்றோர்கள் விவாகரத்து செய்த காரணத்தால், அவரது பாட்டி நவாஜ்பாய் டாடா பாதுகாப்பில் தான் வளர்ந்தார்.

ரத்தன் டாடா பள்ளி படிப்பு

ரத்தன் டாடா 8 ஆம் வகுப்பு வரை மும்பையில் உள்ள கேம்பியன் பள்ளியில் படித்தார், அதைத் தொடர்ந்து மும்பை கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளியிலும், சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியிலும் படித்து 1955 இல் நியூயார்க் நகரத்தில் உள்ள ரிவர்டேல் கண்ட்ரி பள்ளியில் பட்டம் பெற்றார்.

ரத்தன் டாடா - கல்லூரி

சிறு வயது முதலே வர்த்தகத்தில் மிகவும் ஆர்வமாக இருந்த காரணத்தால் டாடா குழுமத்தை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்ல தயாரான ரத்தன் டாடா. 1959 இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு பொறியியல் பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1975 இல், அவர் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் மேலாண்மை பிரிவில் பட்டம் பெற்றார்.

IBM-ல் வேலை

அமெரிக்கக் கல்லூரியில் பட்டம் பெற்ற ரத்தன் டாடா-விற்கு அன்றைய காலக்கட்டத்தில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான IBM-ல் வேலை கிடைத்தும், அதை உதறி தள்ளிவிட்டு இந்தியாவிற்குப் பறந்தார்.

முதல் வேலை


ரத்தன் டாடா படிப்பை முடித்த கையோடு 1961ஆம் ஆண்டு அன்றைய காலக்கட்டத்தில் டாடா குழுமத்தில் மிகமுக்கியமான நிறுவனமாக இருந்த டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஆப்ரேஷன் மேனேஜர் ஆகப் பணியில் சேர்ந்தார்.

திருமணம்

பிஸ்னஸ் மீது தீவிர காதல் கொண்டதால் ரத்தன் டாடா இதுவரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை. 4 முறை திருமணம் செய்துக்கொள்ளும் முடிவை எட்டிய போதும் பல்வேறு காரணத்தால் திருமணம் செய்ய மறுத்தார்.

1991-ல் தலைவர் பதவி

1961 முதல் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனத்தில் முக்கியப் பணிகளையும், பதவிகளையும் வகித்த ரத்தன் டாடா 1991 இல் டாடா குழுமத்தின் தலைவராக ஆனார். ரத்தன் டாடா நிர்வாகதத்தில் டாடா குழுமம் புதிய உயரத்திற்குச் சென்றதை யாராலும் மறுக்க முடியாது.

டாடா குழும வளர்ச்சி

ரத்தன் டாடா தலைமை பொறுப்பேற்ற பின்பு டாடா குழுமத்தின் வருவாய் 40 மடங்கிற்கு மேலும், லாபம் 50 மடங்கு அதிகமாகவும் வளர்ச்சி அடைந்தது. 1991 இல் $5.7 பில்லியன் மட்டுமே ஈட்டிய டாடா குழுமம் 2016 இல் $103 பில்லியனை ஈட்டியது.

வரலாற்றில் சிறப்புமிக்க முடிவுகள்

டாடா குழுமத்தின் வரலாற்றில் சிறப்புமிக்கப் பல முடிவுகள் ரத்தன் டாடா நிர்வாகத்தில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. லேண்ட் ரோவர் ஜாகுவார் பிராண்டை டாடா மோட்டார்ஸ் உடன் இணைத்தது. டெட்லி பிராண்டை டாடா டீ நிறுவனத்துடனும், கோரஸ்-ஐ டாடா ஸ்டீல் உடனும் இணைப்பட்டது ரத்தன் டாடாவின் வல்லமை பல நூற்றாண்டுகள் பேசப்படும்.

டாடா மோட்டார்ஸ்

டாடா குழுத்தில் ரத்தன் டாடாவுக்கு டாடா ஸ்டீல் நிறுவனத்தைத் தொடர்ந்து அதிகம் விரும்பிய ஒரு நிறுவனம் என்றால் அது டாடா மோட்டார்ஸ் தான். 2009 ஆம் ஆண்டில், நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய வகையில் வெறும் 1 லட்சம் ரூபாய்க்கு மலிவான காரைத் தயாரிப்பதாக ரத்தன் டாடா உறுதியளித்தார்.

1 லட்சம் ரூபாயில் கார்

இது சாத்தியமற்றது எனப் பலரும் கூறிய நிலையில் மக்களுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியே ஆக வேண்டும் என டாடா நானோ கார்-ஐ உருவாக்கி வெறும் 1 லட்சம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தினார்.

டாடா நானோ கார்

டாடா நானோ கார்-ன் தரம் குறித்துப் பல கேள்விகள் இருந்தாலும், இது நடுத்தர மக்களின் சொந்த கார் என்ற கனவை நினைவாக்கியது மறுக்க முடியாத ஒன்று. டாடா நானோ கார்-ஐ வடிவமைப்பதில் ரத்தன் டாடா நேரடியாக இறங்கி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

ரத்தன் டாடா இந்தியாவின் வளர்ச்சிக்கு டெக் சேவைகள் பெரிய அளவில் உதவும் என நீண்ட காலமாக நம்பிய காரணத்தால் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் -க்கு இணையாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தையும் அதிகப்படியான முக்கியதுவம் கொடுத்து விரிவாக்கம் செய்தார்.


டிசிஎஸ் ஐபிஓ

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2004ல் ஐபிஓ வெளியிட்ட பின்பு ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் இன்ற இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை அளிக்கும் நிறுவனமாகவும் உள்ளது.

F-16 ஃபால்கன் விமானம்

ரத்தன் டாடாவுக்கு விமானம் மற்றும் விமானத்தை இயக்குவது மிகவும் பிடிக்கும். அவர் ஒரு திறமையான விமானி என்பதை நிரூபணம் செய்யும் வகையில் பைலட் உரிமம் பெற்றுள்ளார். இதற்கிடையில் தனது நீண்ட நாள் ஆசையைத் தீர்த்துக் கொள்ள 2007 ஆம் ஆண்டு F-16 ஃபால்கன் விமானத்தை இயக்கி, இந்த விமானத்தை இயக்கிய முதல் இந்தியர் என்ற பெருமையும் ரத்தன் டாடா பெற்றார்.

கார் பிரியர்

ரத்தன் டாடா பிசியான பிஸ்னஸ்மேன் ஆக இருந்தாலும் இவர் மிகப்பெரிய கார் பிரியர் ஆவார். இவர் ஃபெராரி கலிபோர்னியா, காடிலாக் எக்ஸ்எல்ஆர், லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர், கிறைஸ்லர் செப்ரிங், ஹோண்டா சிவிக். Honda Civic, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ், மசெராட்டி குவாட்ரோபோர்ட், மெர்சிடிஸ் பென்ஸ் 500 SL, ஜாகுவார் F-டைப், ஜாகுவார் CFTR போன்ற பல கார்களை வைத்துள்ளார்.

நாய்கள் மீது காதல்

ஜாம்செட்ஜி டாடா காலத்திலிருந்தே டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமையகமான பாம்பே ஹவுஸ்-ல் மழை காலத்தின் போது தெருநாய்களைப் பாம்பே ஹவுஸ்-க்குள் அனுமதிப்பது வழக்கம். சமீபத்தில் ரத்தன் டாடா உத்தரவின் பெயரில் பாம்பே ஹவுஸ்-ல் தெரு நாய்களுக்கான கொட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தக் கொட்டில் தெரு நாய்களுக்கான பொம்மைகள், விளையாட்டு பகுதி, தண்ணீர் மற்றும் உணவு ஆகியவை உள்ளன.

ரத்தன் டாடாவுக்கு canine எனப்படும் கோரை நாய்கள் மீது தீரா காதல் உண்டு. இவரிடம் தற்போது டிட்டோ மற்றும் மாக்சிமஸ் என இரண்டு செல்ல நாய்களை வளர்த்து வருகிறார்.

நன்கொடை


இவர் டாடா குழுமத்தின் தலைவராக இருந்த போதும் சரி, டாடா குழுமத்தின் தலைவர் பதிவையைச் சைர்ஸ் மிஸ்திரி மற்றும் சந்திபசேகரன் ஆகியோரிடம் கொடுத்த பின்பும் சரி கல்விக்கும், மக்கள் நலனுக்கும் அதிகப்படியான நன்கொடையைக் கொடுத்துள்ளார்.

இதேபோல் டாடா குழுமத்தின் ஊழியர்கள் நலனில் அதிகம் அக்கறை கொண்டவராகவும் ரத்தன் டாடா திகழ்கிறார்.

ஹார்வார்டு பல்கலைகழகம்

ரத்தன் டாடா தான் படிதித் ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூலில் ஒரு நிர்வாக மையத்தை கட்டுவதற்காக $50 மில்லியன் தொகையை நன்கொடையாக கொடுத்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் இந்த மையத்திற்கு டாடா ஹால் என்று பெயரிட்டது.

ஐஐடி பாம்பே

2014 ஆம் ஆண்டில், டாடா குழுமம் ஐஐடி பாம்பே கல்லூரிக்கு மக்கள் மற்றும் சமூகங்களின் தேவைகளுக்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் பொறியியல் கொள்கைகளை உருவாக்குவதற்கான மையத்தை உருவாக்க ரூ 95 கோடி நன்கொடை அளித்தார். இந்த மையத்திற்கு Tata Center for Technology and Design (TCTD) என பெயரிடப்பட்டு உள்ளது.

விருதுகள்

ரத்தன் டாடாவுக்கு 2009 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பேரரசின் கெளரவ நைட் கமாண்டர் விருது வழங்கப்பட்டது. மேலும் 2014 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய முக்கியப் பங்கிற்காக பிரிட்டிஷ் பேரரசின் மிக சிறந்த வரிசையின் கெளரவ நைட் கிராண்ட் கிராஸ் விருது வழங்கப்பட்டது.

இந்திய அரசு ரத்தன் டாடாவுக்கு உயரிய விருதான பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருதுகளை கொடுத்துள்ளது.

ஸ்டார்ட்அப் முதலீடுகள்

ரத்தன் டாடா படிப்பை முடிந்த காலத்தில் இருந்த டெக்னாலஜி மீது அதிகம் ஆர்வம் கொண்டு இருந்த காரணத்தால் தான் டிசிஎஸ்-க்கு அதிகமான ஆதரவை அளித்தார். இதன் வெளிப்பாக ரத்தன் டாடா தனது சொந்த முதலீட்டு நிறுவனத்தின் வாயிலாக இந்தியாவில் பல ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் முதலீடு செய்துள்ளது.

84வது பிறந்த நாள்

இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் அதிகம் பாசம் வைத்த ரத்தன் டாடா இன்று 84வது பிறந்த நாள்-ஐ கொண்டாடுகிறார். தொழிலதிபர்கள் பொதுவாகவே லாபத்தை முதன்மைப்படுத்தி வர்த்தகத்தை இயக்குவார்கள் ஆனால் ரத்தன் டாடா நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தியும், அதேவேளையில் ஊழியர்கள் நலனில் அதிகப்படியான அக்கறை கொண்டவாராகவும் உள்ளார்.


இதனாலேயே ரத்தன் டாடா-வுக்கு டாடா குழு ஊழியர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் பொது மக்கள் மத்தியிலும், நிறுவன தலைவர்கள் மத்தியிலும் அதிக அன்பும் மரியாதையும் உண்டு. 

ஆதாரம்

Good Return e Paper


Advertisement
நாம் அறிந்த ரத்தன் டாடாவின் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள் நாம் அறிந்த ரத்தன் டாடாவின் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள் Reviewed by Rajarajan on 30.12.21 Rating: 5

கருத்துகள் இல்லை