ரேஷன் அட்டைதாரர்களுக்கான மத்திய அரசின் ‘Mera Ration’ செயலி – பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?
நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களின் நலனுக்காக மேரா ரேஷன் செயலி பயன்பாடு தற்போது நடைமுறையில் உள்ளது. இப்போது, பயனர்கள் இந்த செயலி மூலம் அருகிலுள்ள நியாய விலைக் கடையை கண்டுபிடிக்க முடியும். மேலும் பயனர்கள் தங்கள் உரிமை மற்றும் சமீபத்திய பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களையும் சரிபார்க்க முடியும். தற்போது, இந்த செயலி பயன்பாடு, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் கிடைக்கிறது. விரைவில் 14 இந்திய மொழிகளை இந்த செயலியில் சேர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு சேவைகளை குடிமக்கள் முறையாக நிர்வகிக்கும் வகையில் மேரா ரேஷன் என்ற செயலியை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
இப்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு அமைப்பின் உதவியுடன், இந்தியாவில் உள்ள 69 கோடி பயனாளிகளை தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) இந்த செயலியில் உள்ளடக்கியுள்ளது. இந்த மேரா ரேஷன் செயலி அமைப்பை சிறப்பாக நிர்வகிக்க அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் உதவும் வகையில் இவை தற்போது, மொபைல் ஆண்ட்ராய்டில் கிடைக்கிறது. இப்போது இந்த மேரா ரேஷன் செயலியை ஆண்ட்ராய்டு மொபைலில் எப்படி பதிவிறக்கம் செய்து கொள்வது குறித்து இப்பதிவில் காணலாம்.
மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று, search பக்கத்தை கிளிக் செய்யவும்.
- அதில் மேரா ரேஷன் என்று டைப் செய்து அதனை தேர்வு செய்யவும்.
- பிறகு மத்திய குழு பதிவேற்றிய பயன்பாட்டைப் பதிவிறக்கி நிறுவவும்.
- பயன்பாட்டைத் திறந்து, உங்கள் ரேஷன் கார்டு விவரங்களை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளவும்.
- பின்னர் உங்களுக்கு தேவையான விவரங்களை அதில் பெற்றுக்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை