TNPSC தமிழ் பாடத்திட்டத்தில் திராவிட சுயமரியாதை இயக்கம் இணைப்பு..!
தமிழகத்தில் அரசுப் பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக பணியிடங்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போட்டி தேர்வுகளில் தமிழ்மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பாடத்திட்டத்தை தற்போது இணையதளத்தில் TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்த பாடத்திட்டத்தில் நடப்பு நிகழ்வுகள், சமுதாய பிரச்சனைகள், திராவிட சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம் போன்ற பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வினாத்தாளில் கட்டுரை எழுதுதல், பிரித்தெழுதுதல், ஒரே தொடர் அமைத்தல், எதிர்மறை வாக்கியம் அமைத்தல், பிழை நீக்குதல் போன்ற கேள்விகளும் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு தமிழ் மொழியைப் பற்றிய கேள்விகள் கேட்கப்படுவதன் மூலமாக தமிழகத்தை சேர்ந்தவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC தமிழ் பாடத்திட்டத்தில் திராவிட சுயமரியாதை இயக்கம் இணைப்பு..! 
 
        Reviewed by Rajarajan
        on 
        
25.12.21
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
25.12.21
 
        Rating: 


கருத்துகள் இல்லை