தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு இல்லை – முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு!
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பதால் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்த ஆலோசனை கூட்டத்தில் தற்போதைக்கு ஊரடங்கு இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு இல்லை:
தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் அலை என இரண்டு அலைகளாக கொரோனா தொற்று பரவி மக்களை அதிக பீதியில் ஆழ்த்தியது. இதனால் அரசு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்து அத்தியாவசியம் தவிர அனைத்து நிறுவனங்களும் திறக்கப்படவில்லை. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 27,42,224 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.6% ஆக உள்ளது. இந்த நிலையில் நைஜீரியாவிலிருந்து சென்னை வந்த பயணி மூலம் ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் தமிழகத்தில் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று புள்ளி விவர பட்டியலில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி முதல் இரண்டு இடத்தில் உள்ளது.
தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் அடிப்படையில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளதாகவும் மற்றும் 24 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக உள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே ஓமைக்ரானை கட்டுப்படுத்த வார் ரூம்களை ஏற்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய நடைமுறைகளை பற்றி ஆலோசித்தகவும் மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை இரவு நேரங்களில் கடற்கரைகளில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதிகாரிகளின் தகவலின் படி ஓமைக்ரான் தொற்று 10% அளவில் நெருங்கினால் ஊரடங்கை அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. சுகாதாரத் துறையில் ஒப்பந்த பணியாளர்களின் பணி காலத்தை மேலும் நீட்டிப்பு செய்யவும் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தீவிர அவசர கட்டுப்பாட்டு மையங்கள் மீண்டும் தயார் நிலையில் வைத்திருக்கவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனால் தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை என்று ஆலோசனை முடிவில் தகவல் வந்துள்ளது.
கருத்துகள் இல்லை