மாநில அரசு ஊழியர்களுக்கு DA 31% ஆக உயர்வு, ஜூலை 2021 முதல் அமல் – உத்தரவு பிறப்பிப்பு!
உத்தரபிரதேச மாநில அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை 28% ல் இருந்து தற்போது 2021 ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு 31% ஆகஉயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் பேரில், ஆண்டிற்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் முறையே அகவிலைப்படியினை உயர்த்தும். ஊழியர்களின் அகவிலைப்படியானது நாட்டின் நிதியாண்டில் வருவாய் இழப்பை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அகவிலைப்படையானது உயர்த்தப்படுவதால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அதனோடு தொடர்புடைய அனைத்து பலன்களையும் அதிகரிக்கும். ஊழியர்களின் பணி நிலைக்கு தகுந்தாற்போல் பலன்கள் வழங்கப்படுகிறது.
கடந்த 2020 ஜனவரி மாதத்தில் இறுதியாக 17% ஆக இருந்த DA ஆனது, கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் நிலுவையில் வைக்கப்பட்டது. இதனால் 3 தவணைகளாக அதாவது 18 மாதங்களுக்கான அகவிலைப்படையானது ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. தொடர்ந்து ஊழியர்களின் கோரிக்கை வலுத்து வந்த காரணத்தால் கடந்த ஜூலை மாதம் ஊழியர்களின் அகவிலைப்படியானது 28% ஆக உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. இந்நிலையில், 2021 ஜூலை தவணைக்கான DA உயர்வு கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு 3% உயர்த்தப்பட்டது. இதனால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படியானது 31% ஆக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் முடிவை பின்பற்றி அனைத்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களின் DA உயர்வை அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தது. பின்னர், மத்திய அரசு DA உயர்வை அமலுக்கு கொண்டு வந்த பிறகு, ஒவ்வொரு மாநில அரசுகளும் படிப்படியாக ஊழியர்களின் அகவிலைப்படியினை அறிவித்து வருகிறது. இதேபோல்,தற்போது உத்தரபிரதேச மாநில அரசு தனது ஊழியர்களின் இறுதியான DA உயர்வு 28% ஆக இருந்த நிலையில்,தற்போது 2021 ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு 3% அதிகப்படுத்தி மொத்தம் 31% ஆக அறிவித்துள்ளது. அரசின் இந்த உத்தரவு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை