ஜனவரி 3 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றமா..? கல்வித்துறை விளக்கம்
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது சுழற்சி முறையில் இல்லாமல் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு தனது ஆணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சுழற்சி முறையிலேயே தான் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
:
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக பரவி வரும் ஓமைக்ரான் வகை தொற்று மொத்தம் 33 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தமிழக பள்ளிகளில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்துவது மேலும் நீட்டிக்கப்படலாம். இது குறித்து விவாதிக்க கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மறுஆய்வுக் கூட்டம் விரைவில் என்றும், சுழற்சி அடிப்படையில் நேரடி வகுப்புகளை தொடர்ந்து நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகளில் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.116 கோடியை ஒதுக்கியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்குவதை மீண்டும் தொடங்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். குழந்தைகளின் பாதுகாப்பு, கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரம் குறித்து பள்ளித் தலைவர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் கூடுதல் பயிற்சி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களின் கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை