பள்ளிகளுக்கு டிச.27 முதல் டிச.31 வரை மட்டுமே விடுமுறை? சர்ச்சை அறிவிப்பு!
பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறையாக டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. பின்னர் திருத்தம் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டது.
அதில், டிசம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுமுறைக்கு பின்னர் ஜனவரி 3ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் தற்போது புதிதாக குழப்பம் எழுந்துள்ளது. ஆனால் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினம், 26ம் தேதி ஞாயிற்று கிழமை, மேலும், ஜனவரி 1 புத்தாண்டு , ஜனவரி 2 ஞாயிற்று கிழமை என்பதால் அந்த நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் விடுமுறை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 27.12.21 முதல் 31.12.22 வரை விடுமுறை என தவறான தேதி குறிப்பிட்டு இருந்தது. பின்னர் அதை நீக்கம் செய்து திருத்தம் செய்த செயல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை