டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2022-ஆம் ஆண்டின் சேர்க்கை tnpsc அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
செய்திவெளியீடு : 71/2021
நாள் : 07.12.2021
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 9/2021 மற்றும் 18/2021, விளம்பர எண் 589 மற்றும் 598-இல் டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜீலை 2022, பருவத்தில் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் சேருவதற்கான (Qualifying examination for admission of Boys and Girls to Rashtriya Indian Military College, Dehradun for July 2022 Term) தகுதித் தேர்வின் எழுத்துத் தேர்வானது “கணக்கு, பொது அறிவு மற்றும் ஆங்கிலம்” ஆகிய மூன்று பாடப்பிரிவுகளுக்கும் (i.e. Mathematics, General Knowledge and English) 2021- ஆம் வருடம் டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி சென்னை , மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய தேர்வுமையங்களில் நடைபெற உள்ளது.
வ.எண். | பாடம் | நாள்/கிழமை | தேர்வு நேரம் (முப.மற்றும் பிய.) |
---|---|---|---|
1 | கணக்கு | 18/12/2021 (சனிக்கிழமை) | 09.30 – 11.00 |
2 | பொது அறிவு | 18/12/2021 (சனிக்கிழமை) | 12.00 – 01.00 |
3 | ஆங்கிலம் | 18/12/2021 (சனிக்கிழமை) | 02.30 – 4.30 |
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு >>> OFFICIAL NOTIFICATION FOR TNPSC
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியாளர்களை நியமிக்க தேர்வுகளை நடத்துகிறது. அதுமட்டுமல்ல, நுழைவுத்தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. தற்போது வந்த அறிவிப்பின்படி, டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2022-ஆம் ஆண்டின் சேர்க்கைக்காக வருகிற 18-ஆம் தேதி நுழைவுத்தேர்வை நடத்தப்போகிறது. இந்த நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும். மாணவர்கள் உரிய நேரத்தில் தேர்வுக்கு வரவேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை