Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்ய பரிந்துரை

 நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் பெருகிக்கொண்டே இருக்கும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது.




முழு ஊரடங்கு

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் ஒமிக்ரான் தொற்று சூழலுக்கு மத்தியில் மாநிலங்கள் தோறும் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. என்றாலும் ஒமிக்ரான் வைரஸின் தினசரி பாதிப்பு விகிதம் தற்போது 500ஐ நெருங்கி வந்திருக்கிறது. இதற்கிடையில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை அமல்படுத்த அறிவுறுத்தி இருக்கும் மத்திய அரசு உடனடியாக அந்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு தற்சமயம் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி இருக்கிறது.


இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மீண்டுமாக உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் புத்தாண்டு கொண்டாட்டங்களால் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகமாவதை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவுகளை மாநில அரசுகள் பிறப்பித்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.


மேலும் தேவை ஏற்படின் இரவு நேர ஊரடங்குகளை அமல்படுத்திக் கொள்ளலாம் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு மாநிலங்களில் நிலவும் நோய் தொற்று சூழலுக்கு ஏற்றபடி கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. தொடர்ந்து மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யும் படிக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழகத்திலும் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்ய பரிந்துரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்ய பரிந்துரை Reviewed by Rajarajan on 27.12.21 Rating: 5

கருத்துகள் இல்லை