சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தொடங்கும் தேதி குறித்து TNPSC முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் பதவியில் காலியாக உள்ள 28 பதவிகளுக்கு கடந்த ஏப்ரம் மாதம் 18ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் 390 பேர் கலந்து கொண்டனர். இதேபோல் தோட்டக்கலை அலுவலர் பதவியில் காலியாக உள்ள 169 பதவிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் 1,540 பேர் பங்கேற்றனர். இதில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு,
அப்பதவிக்கான விதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக 384 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நபர்களுக்கு வரும் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும். மேலும் தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க பணிகள் வேளாண்மை அலுவலர் பதவியில்
காலியாக உள்ள 445 பதவிக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. அதில் 12,222 பேர் கலந்து கொண்டனர். இதில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றிற்கு தற்காலிகமாக 721 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையும்,
ஜனவரி 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையும் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், வரும் 2022ஆம் ஆண்டு போட்டித் தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி சார்பில் 32 தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை