வேலை இல்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் விரைவில் நடந்த முடிவு
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகளின்படி, தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாம்களில் பல துறைகளைச் சார்ந்த வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
மேலும், இம்முகாம்களில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்குபெற உள்ளன.
இவ்வேலைவாய்ப்பு முகாம்களில் அயல்நாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கவும், திறன் பயிற்சிக்கு பதிவு செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்படும்.
எனவே, இவ்வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்க அனைத்து வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் முன்கூட்டியே தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டைச் சார்ந்த வேலைதேடும் இளைஞர்கள் பெருவாரியாக இம்முகாம்களில் பங்கேற்று பயன்பெற வேண்டுமாறு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் வீர ராகவராவ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை