தமிழ்நாட்டில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 18,129 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேருக்கும் ஒமிக்ரான் தொற்றின் முதல்நிலை பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மேலும், 24 பேரின் பரிசோதனை முடிவு வரவேண்டி உள்ளது எனவும், தொற்று கண்டறியப்பட்டவர்களில் 2 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என கூறினார். இதனால், பொதுமக்கள் அச்சமடையவில்லை கூறிய அவர், சென்னையில் 26 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும் மதுரையில் 4 பேருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை