Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை 3 நாட்கள் விடுமுறை ஊழியர்கள் மகிழ்ச்சி

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்றும், 3 நாட்கள் விடுமுறை என்றும் ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது. 

ஐக்கிய அரபு நாடுகளில் இதுவரை வாரத்தில் 6 நாட்கள் பணி நடைபெற்று வருகிறது. அதாவது ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா, அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மன், உம் அல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய நாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை மேற்கொள்வதால் அன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகளில் பணி நாட்களில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றம் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




அதன்படி ஜனவரி 1ம் தேதி முதல் திங்கள் – வியாழன் காலை 7.30 மணிக்கு பணி தொடங்கி மாலை 3.30 மணி வரை என தொடர்ந்து 8 மணி நேரம் பணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வெள்ளிக்கிழமை பணி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு வேலை தொடங்கி மதியம் 12 மணிவரை என 4.30 மணி நேரம் மட்டும் பணிபுரியும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பின்னர் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடிந்ததில் இருந்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக வேலை நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஷார்ஜா 2.5 நாட்கள் விடுமுறையை 3 நாட்களாக மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய முறை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தகைய உத்தரவு வணிகச் சூழல் மற்றும் பொருளாதாரச் சந்தையை ஆதரிக்கும் மேலும் உலக வளர்ச்சியுடன் வேகத்தைத் தொடரும் என்று ஷார்ஜா அரசு தெரிவித்துள்ளது.

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை 3 நாட்கள் விடுமுறை ஊழியர்கள் மகிழ்ச்சி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை  3 நாட்கள் விடுமுறை ஊழியர்கள் மகிழ்ச்சி Reviewed by Rajarajan on 11.12.21 Rating: 5

கருத்துகள் இல்லை