டிசம்பர் 28ம் தேதி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
பள்ளிகளை ஜனவரி 3ல் முழுமையாக திறப்பது குறித்து, 28ம் தேதி முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.,க்களுடன், சென்னையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இதில் ஜன., 3ம் தேதியில் இருந்து, 6ம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும், முழு நாளும் நேரடி வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடைமுறை குறித்து ஆய்வு செய்ய, 28ம் தேதி சென்னையில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் பங்கேற்று, ஆலோசனைகள் வழங்க உள்ளார். இதில் பள்ளி கட்டட விபத்துகள், அதற்கு பின் நடந்த கட்டட ஆய்வுகள், மாணவியருக்கான பாலியல் பிரச்னைகள், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், பதவி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, ம ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
டிசம்பர் 28ம் தேதி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
 
        Reviewed by Rajarajan
        on 
        
25.12.21
 
        Rating: 

கருத்துகள் இல்லை