Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – அரசு முக்கிய முடிவு!

 


தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – அரசு முக்கிய முடிவு!

திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த பல வாக்குறுதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகையாக வழங்க உள்ளதாக அரசு அறிவித்திருந்த திட்டத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் ஏதும் வெளியாகாததால் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.




உரிமைத்தொகை:

திமுக தேர்தலுக்கு முன்னதாக பல வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தது. ஆட்சிக்கு வந்த பின்னர் கொரோனா உதவித்தொகை ரூ.4,000, அரசு பேருந்துகளில் மகளிற்கு இலவச பயணம், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைதொகை போன்ற திட்டங்களை அறிவித்தது. இதில் கொரோனா நிவாரண நிதி, மகளிருக்கான இலவச பயணம், கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி போன்ற திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைதொகையாக வழங்கப்படும் என்ற திட்டம் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.


பெண்களுக்கான இந்த சிறப்பு திட்டம் புதிய அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே அமலுக்கு கொண்டுவரப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதனால் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் பல தரப்புகளில் இருந்து குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டுவர கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அரசு தபால் இருந்து, இதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று மட்டும் தெரிவித்து வந்தனர்.


ஆனால் எப்போது திட்டம் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் ஜனவரி 5ம் தேதி மீண்டும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஒரு வாரம் நடக்க உள்ளது. சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் முதல்வர் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டமன்ற கூட்டத்தொடரில் குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிகின்றது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் அரசின் திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. இதனால் அரசு கூடுதலாக சில திட்டங்களையும் அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – அரசு முக்கிய முடிவு! தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – அரசு முக்கிய முடிவு! Reviewed by Rajarajan on 15.12.21 Rating: 5

கருத்துகள் இல்லை