பல சிம் கார்டுகள் வைத்திருந்தால் அதிரடி நடவடிக்கை
இந்தியாவில் ஒரே ஒரு சிம் கார்டு மட்டும் பயனர் என்ற பயனர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, இப்படி ஒரே ஒரு சிம் கார்டை மட்டும் தனது வாழ்நாளில் பயன்படுத்தும் பயனர்களைப் பார்ப்பது என்பதே மிகவும் அரிதானது. உண்மையில் நீங்கள் வெறும் ஒரே ஒரு சிம் கார்டை மட்டும் தான் இப்போது வரை பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று தான் கூற வேண்டும். இப்படி ஒரே ஒரு சிம் கார்டை மட்டும் பயன்படுத்தும் பயனர்கள் இருக்கும் அதே இடத்தில், இன்னும் சிலர் எண்ணில் அடங்காத பல சிம் கார்டை வாங்கி பயன்படுத்தும் பயனர்களும் இந்தியாவில் உள்ளனர்.
குறிப்பிட்ட எண்ணிற்கு மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்திருந்தால் அதிரடி நடவடிக்கை
இவர்களைப் போன்ற நபர்களின் எண்ணில் அடங்க சிம் கார்டு பயன்பாட்டைக் குறைப்பதற்காக இப்போது இந்தியத் தொலைத்தொடர்புத் துறை அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி, இந்தியத் தொலைத்தொடர்புத் துறை கூறியுள்ள குறிப்பிட்ட எண்ணிற்கு மேல் சிம் கார்டு பயன்படுத்தும் பயனர்களைக் கண்டுபிடிக்க அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,இனி வெறும் ஒன்பது வரையிலான சிம் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். இதற்கு மேல் இருக்கும் அனைத்து சிம் கார்டுகளும் டெலிகாம் நிறுவனங்களால் தடை செய்யப்படும் அல்லது இடைநிறுத்தம் செய்யப்படும். இந்தியப் பயனர்கள் இப்போது தங்கள் பெயரில் ஒன்பது சிம் கார்டுகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என்பது அதிரடியாக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை