மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ops - பழைய ஓய்வூதியத் திட்டம்? அரசு ஆலோசனை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியக் கொள்கையில் சலுகை குறைவாக இருக்கும் நிலையில் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசுத்துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு அமலில் இருந்து வந்த ஓய்வூதியக் கொள்கையை மாற்றி கடந்த 2010ம் ஆண்டு அரசு புதிய ஓய்வூதிய கொள்கையை அமல்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய கொள்கையில் சலுகைகள் குறைவாக கொடுக்கப்படுவதால் இந்த திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்போது, மத்திய அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) தொடர்பாக சட்ட அமைச்சகத்திடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. மேலும், டிசம்பர் 31ம் தேதி அல்லது அதற்கு முன் வெளியிடப்பட்ட தகவல்கள் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்துவது தொடர்பாகவும் அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்கான ஆலோசனைகள் முடிந்த பிறகு இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பணியாளர் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஓய்வூதியதாரர்கள் நலத்துறை நிதிச் சேவைத் துறையிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு இது தொடர்பான பரிசீலனை சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 2004 ஜனவரி 1க்கு முந்தைய நிலவரத்தின் படி புதிய ஓய்வூதிய கொள்கையில் இருந்து ஊழியர்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக நிதிச்சேவைகள் துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை முடிவு எடுக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் மத்திய ஆயுதப்படை ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லையென்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கம் கொடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை