தமிழகத்தில் ஓமைக்ரான் தடுப்பு பணியாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடபடுமா ? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் ஓமைக்ரான் தடுப்பு பணியாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடபடுமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற தொடங்கியது. அதன் பிறகு தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று பரவி வருகிறது.
ஓமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அண்மையில் பள்ளிகளை மூடுவது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து தற்போது ஒமைக்ரான் தொடர்பாக சுகாதாரத் துறையில் இருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை. ஊரடங்கில் தளர்வுகளை அமல்படுத்தும் போது, தமிழக முதல்வர் அவர்கள் மருத்துவ ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசித்து இது குறித்து முடிவெடுப்பார்.பள்ளிகள் மூடப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தியில் உண்மையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை