1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு
தமிழகத்தில் ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு புதிய ஊரடங்கு கடுப்பாடுகளை தற்போது பிறப்பித்துள்ளது.
3ம் அலை பரவல் தமிழகத்தில் தொடங்கிய போது, முதல்வர் மருத்துவ குழுவுடன் ஆலோசித்து ஜனவரி 4 ஆம் தேதி முதல் இரவு ஊடரங்கு மற்றும் வார இறுதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா 3ம் அலைப்பரவல் பாதிப்பானது கொரோனா தொற்றின் தினசரி பாதிப்புகள் மற்றும் கொரோனா பாசிட்டிவிட்டி விகிதம் சரிவடைய துவங்கி இருக்கிறது. மேலும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழக அரசு இன்று மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதா? அல்லது தளர்த்துவதா? என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி, அரசு புதிய ஊடரங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் 28.01.2021 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. அதே போல் வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-202) முதல் முழு ஊரடங்கு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள் /தொழிற்பயிற்சி மற்றம் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை