கொரோனா தொற்று ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு 10 நாட்கள் சம்பளம் கிடையாது
அரசு ஊழியர்களுக்கு 10 நாட்கள் சம்பளம் கிடையாது – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!
அரபு அமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ள 10 நாட்கள் விடுப்பு அளிக்கப்படும் மருத்துவ விடுப்பு நாளுக்கான சம்பளம் பிடித்துக் கொள்ளப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் சம்பளம்:
உலகம் முழுவதும் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமிக்ரான் தொற்று பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் அதிக பதிப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுவரை 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் பரவியுள்ளது. கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்களும் தொற்று கண்டறியப்பட்டு வருவது பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அனைத்து நாடுகளும் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து நாடுகளும் கடுமையான ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தி வருகிறது.
மற்ற நாடுகளை தொடர்ந்து அரபு அமீரகத்திலும் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை 2,500ஆக உயர்ந்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு தடுப்பு பணியாக தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்த வருகிறது. இந்த நிலையில் நேற்று 2,683 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமீரகத்தில் தகுதியான நபர்களில் 99 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பாக, இரண்டாவது முறை வைரஸ் பாதிப்பிற்கு ஆளானால் அவர்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அளிக்கப்படும் மருத்துவ விடுப்பு நாளுக்கான சம்பளம் பிடித்துக் கொள்ளப்படும். அதாவது சம்பளமில்லா விடுப்பு மட்டுமே வழங்கப்படும். ஒருநாள் முதல் 10 நாட்கள் வரை சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை ஊழியர்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு 10 நாட்கள் சம்பளம் கிடையாது
Reviewed by Rajarajan
on
14.1.22
Rating:
கருத்துகள் இல்லை