கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு குறித்த வழிகாட்டுதல் அறிவிப்பு
ஆன்லைன் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு குறித்த வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 21ஆம் தேதி, கொரொனா பரவலை கருத்தில் கொண்டு, மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தப் பின், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறை தேர்வுகள் நடத்தப்படும் எனவும், இறுதி செமஸ்டர் தேவுகள் மட்டும் நேரடியாக நடத்தப்படும் எனவும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியிருந்தார். மேலும், அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு முறை நடத்தப்படும் என இன்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆன்லைன் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு குறித்த வழிகாட்டுதல்களை தற்போது உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் தேர்வு முடிந்த பின் மாணவர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என்றும், நேரடியாக எழுதப்பட்ட விடைத்தாள்களையும் அஞ்சல் மற்றும் கூரியர் வாயிலாக அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும், அஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள உயர்கல்வித்துறை, முறைகேடுகளை தடுக்கும் வகையில் விடைத்தாள்கள் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே மதிப்பீடு என்ற புதிய நடைமுறை அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை