சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க அனுமதி – அரசுக்கு முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி வந்தனர். மேலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டதால் கடந்த நவம்பர் மாதத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் வைரஸ் தமிழகத்திலும் கண்டறியப்பட்டது. அத்துடன் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருமண மண்டபங்கள் மற்றும் பொழுதுபோக்கு, பொதுப் போக்குவரத்து, பூங்கா, திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளனர்.
தற்போது பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் குடும்பத்தினருடன் அதிகம் பேர் சுற்றுலா தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் சென்று வருகின்றனர். அதனால் கொரோனாவின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். அதனால் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். மேலும் தனியாா் பள்ளி ஆசிரியர்களில் பலர் பள்ளிகளுக்கு அளிக்கப்படும் தொடர் விடுமுறை காரணமாக வேலையிழந்துள்ளனர். அதன் காரணமாக கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை