10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வில் புதிய விதிமுறைகள் அமல்!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது.
இதில் குறிப்பாக 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்த கூடாது என்றும் ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்தி கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. ஆனால் பொது தேர்வு எழுதும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் நேரடி வகுப்புகளை நடத்தி கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மாா்ச் மாதங்களில், முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளது. அத்துடன் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயமாக நேரடி முறையில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா பரவலின் தாக்கம் அதிகரிக்கும் போது இந்த இரண்டு திருப்புதல் தேர்வுக்கான மதிப்பெண்கள் பொதுத்தேர்வு மதிப்பெண்களாக எடுத்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து இது குறித்த முக்கிய அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது நடைபெற உள்ள திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறை குறித்து தேர்வுத்துறை சில அறிவுரைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஒரே பள்ளியில் விடைத்தாள்களை திருத்தி கொள்ளாமல் வெவ்வேறு பள்ளிகளில் பரிமாற்றம் செய்து திருத்த வேண்டும். அத்துடன் பொதுதேர்வு நடத்துவது போல திருப்புதல் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதன் மதிப்பெண்களை பள்ளிக் கல்வித் துறையின் ‘எமிஸ்’ மேலாண்மையின் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான வழிமுறைகளை விரைவில் அறிவிக்கப்படும். மேலும் திருப்புதல் தேர்வுகள் குறித்து எந்தவித புகார்களும் வராமல் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வில் புதிய விதிமுறைகள் அமல்!
Reviewed by Rajarajan
on
8.1.22
Rating:
Mpc
பதிலளிநீக்கு