தமிழகத்தில் இரவு, ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் வருகிற ஜனவரி 28 முதல் இறுதி ஊரடங்கு ரத்து செய்ய இருப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு நீக்கம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசு சார்பில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் நிலைமையை பொறுத்து ஊரடங்கில் சில விலக்கு வழங்கப்படும். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது. அதனால் அரசு ஊரடங்கை கடுமையாக்க கடந்த 2 வாரங்களுக்கு முன் உத்தரவிட்டது. அதன் படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அத்தியாவசிய தேவைகளை தவிர மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டது. மேலும் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளதால் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் ஜனவரி 28 ஆம் தேதியில் இருந்து இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு ரத்து செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், பள்ளிகள், கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை