அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 9 கடைசி நாள், கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் ஜனவரி 9ம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றினை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தடுப்பூசி சான்றிதழ்:
தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று பரவல் மூன்றாம் அலை எனவும், டெல்டாவை போல வேகமாக பரவும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளார். அதனால் அரசு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மருத்துவ துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் வெளி இடங்களுக்கு செல்லும் விடுமுறை தினமான ஞாயிற்று கிழமைகளில் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று அதிகரிக்கும் நிலையில் மக்கள் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறும் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி தொற்றில் தீவிரத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்ததாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் பொது இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது புதிய உத்தரவாக ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்பவர்கள் தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் 9.1.2022 அன்றுக்குள் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை தங்கள் பணிபுரியும் அலுவலகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை