10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க கல்வி துறை ஆலோசனை
10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கொரோனா தாக்கம் அதிகரித்தால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதனால் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 9- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றது. பிறகு 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
ஆனால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறுவதால் அந்த மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு 10, 11, 12-ம் வகுப்பு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பிறகே, அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை