ஜன.16 ஞாயிறு முழு ஊரடங்கில் புதிய தளர்வுகள் – அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்து விட்டது என்று மக்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு புதிய கட்டுப்பாடுகளை விதித்தார். அதன் பிறகு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
மேலும் இரவு நேர ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. அன்றைய தினம் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், தேவைக்கு ஏற்ப முழு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ஞாயிறு முழு ஊரடங்கின் போது திருமண நிகழ்வுகளுக்கு செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் மத்திய மாநில அரசு தேர்வுகளுக்கு செல்வோர்களுக்கு நேர்முக தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் உணவு பொருட்கள் டெலிவரி நிறுவனங்கள் பிற சொந்தமாக உணவகங்கள் டெலிவரி சேவைகளை மேற்கொள்ள முழு ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் கூடுதல் தளர்வுகளாக மருந்துகள் மற்றும் பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநியோகம் செய்ய பயணிக்கும் நபர்களுக்கு காவல்துறை தனது ஒத்துழைப்பு வழங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை