Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஜன.15க்கு பிறகு அமலாகும் முழு ஊரடங்கு? வெளியான புதிய தகவல்!



தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்டு வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இந்தியாவில் தற்போது புதிய ஒமிக்ரான் வகை வைரஸ் அதன் தாக்கத்தை  பதிவு செய்தது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸின் தினசரி பாதிப்புகள் கணிசமான உயர்வை கண்டுள்ளது.


தற்போது ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தை பொருத்தளவு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை என்றாலும் புதிய கட்டுப்பாடுகள் கடந்த டிச.31ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.


இதற்கிடையில் தமிழகத்தில் தற்போதைய தினசரி கொரோனா பாதிப்பு 1,800 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக 600 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக சென்னையில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. அதே நேரத்தில் ஒமிக்ரான் பாதிப்பும் கூட கணிசமான உயர்வை கண்டுள்ளது. இந்த நிலை மேலும் நீடித்தால் கொரோனா வைரஸ் பாதிப்பின் தினசரி எண்ணிக்கை 15,000 கடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.


அதே போல சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 5,000 பேர் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் வரும் ஜன.15ம் தேதிக்கு பின்னர் அதாவது பொங்கல் பண்டிகைக்கு பிறகு இரவு நேர ஊரடங்கு அல்லது முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

ஜன.15க்கு பிறகு அமலாகும் முழு ஊரடங்கு? வெளியான புதிய தகவல்! ஜன.15க்கு பிறகு அமலாகும் முழு ஊரடங்கு? வெளியான புதிய தகவல்! Reviewed by Rajarajan on 4.1.22 Rating: 5

கருத்துகள் இல்லை