தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
10 ,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொதுத்தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஓமைக்ரான் பரவல் இந்தியாவிலும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 2.83 லட்சமாக பதிவாகி வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 23 ஆயிரத்திற்கு அதிகமாக பதிவாகி வருகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி இருக்கிறது. வார நாட்களில் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
மேலும் சமீபத்தில் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பொது தேர்வு இல்லாத 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொது தேர்வு எழுத இருக்கும். 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த ஆண்டும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுத்தேர்வு நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் மாணவர்களுக்கு வகுப்பு பாடங்கள் எந்த அளவு முடிக்கப்பட்டு இருக்குமோ அந்த கணக்கில் அடுத்த 2 மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று காலை தஞ்சை மாணவி தற்கொலை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொய்யாமொழி தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் பள்ளிகளில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.
கருத்துகள் இல்லை