Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது பணம் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ரயிலில் பயணம் செய்யும் போது, ​​ஒவ்வொரு பயணிகளும் தங்கள் பயணம் சுகமாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதை உறுதிப்படுத்த நமது இந்திய ரயில்வே பல புதிய திட்டங்களையும், விதிகளையும் அறிமுகம் செய்து பயணிகளின் பயண அனுபவத்தை மேன்மேலும் மேம்படுத்தி வருகிறது. இப்படி பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே அறிமுகம் செய்த ஒரு முக்கிய வசதியைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது பணம் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உண்மையில் இந்த வசதியைப் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. இருப்பினும், இந்த வசதி பற்றி நீங்கள் தெரிந்துகொண்டால், உங்கள் பயண டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது பணம் வீணாகாமல், வேறு நாளில் அந்த பயணத்தை மேற்கொள்ள முடியும். ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்வது என்பது இப்போது சுலபமாகிவிட்டது. அதேபோல், பயணம் செய்ய முடியாத சூழ்நிலையில் நாம் முன்பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்வதும் இப்போது சுலபமாகிப் போனது.

டிக்கெட்டை கேன்சலேஷன் முறையால் ஏற்படும் சிக்கல்

ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரண்டு வழியாகவும் ரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவு மற்றும் கேன்சலேஷன் வசதியை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், முன்பதிவு செய்த டிக்கெட்டை எதிர்பாராத காரணத்தினால் கேன்சல் செய்யும் போது நீங்கள் கட்டணமாகச் செலுத்திய தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை வீணாகிறது. இதை மிச்சம் பிடிக்க இந்திய ரயில்வே ஒரு வழியை வைத்துள்ளது. நம்மில் பெரும்பாலானோர் இந்த சிக்கலை நிச்சயமாகச் சந்தித்திருப்போம், இதனால் சில நேரத்தில் முன்பதிவு செய்த டிக்கெட் தொகையில் ஒன்று அல்லது இரண்டு பங்கை இழந்திருப்போம்.

பயணத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக இதைச் செய்தால் மட்டும் போதுமா?

ஆனால், இந்த முறையைப் பின்பற்றினால் அந்த வகையான சிக்கலில் இருந்து பணம் வீணாக்காமல் உங்கள் பயணத்தை வேறு ஏதேனும் ஒரு நாளில் நீங்கள் மேற்கொள்ள முடியும். ரயில்வே விதிகளின்படி, நீங்கள் பயணிக்கவிருந்த முன்பதிவு டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள நேரம் அல்லது நாளில் உங்களால் பயணிக்க முடியவில்லை என்றால், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் ரயில் பயணத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக, உங்கள் பயணத்தை 'முன்கூட்டி' அல்லது 'பிற்போக்கு' செய்யலாம் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். நீங்கள் விரும்பினால், உங்கள் பயணத்தின் போர்டிங் நிலையத்தையும் கூட நீங்கள் மாற்றலாம்.

முன்பதிவு செய்த பயண தேதியை எப்படி மாற்றுவது?

அசல் போர்டிங் நிலையத்தின் நிலைய மேலாளருக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிப்பதன் மூலமோ அல்லது ரயில் புறப்படுவதற்குக் குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன்னதாக கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையத்திற்குச் செல்வதன் மூலமோ பயணிகள் பயணத்தின் போர்டிங் நிலையத்தை மாற்றிக்கொள்ள இந்திய ரயில்வே இப்போது உங்களை அனுமதிக்கிறது. இந்த வசதி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட இரண்டு வகை டிக்கெட்டுகளுக்கும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது பணம் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது பணம் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? Reviewed by Rajarajan on 4.1.22 Rating: 5

கருத்துகள் இல்லை