பட்ஜெட் 2022 இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா..?
பிப்ரவரி 1 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2022-ஐ தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
குறிப்பாக மின்சார வாகனங்களுக்கான சலுகைகள், மானிய திட்டங்கள், வாகன ஸ்கிராப்பேஜ் திட்டம் பற்றிய அறிவிப்புகள், தனி நபர் வரி சலுகை, புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக பல சலுகைகள் குறித்தும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரவிருக்கும் பட்ஜெட்டில் கல்வி மற்றும் உள்கட்டமைப்புதுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாத சம்பளம் பெறுவோர் தாங்கள் செலுத்தும் வரியில் நிரந்தர கழிவாக 50,000 ரூபாய் உள்ளது. இதனை 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது தற்போதைய காலக்கட்டங்களில் ஊழியர்கள், ஓமிக்ரான் அச்சம் காரணமாக வீட்டில் இருந்து பணி செய்து வருகின்றனர். மேலும் மருத்துவ செலவு, இணைய செலவு, மின்சார செலவு என பலவும் உயர்ந்துள்ளன. ஆக சம்பளதாரர்கள் பெறும் நிரந்தர வரி கழிவான 50,000 ரூபாயினை, 75,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்காக பெரியளவில் சொத்து சேர்க்காவிட்டாலும், அதிகபட்சம் நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்பது தான் அனைத்து பெற்றோரின் எண்ணமும். ஆக அப்படிப்பட்ட உயர்கல்விக்காக செய்யும் முதலீடுகளுக்கு வரி சலுகை 80 சி பிரிவின் கீழ் உண்டு. எனினும் தற்போது பெண் குழந்தைகளுக்கான திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்களுக்கு வெளிப்படையான வரி விலக்கு என்பது இல்லை. இது 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. எனினும் இது பல்வேறு வரி சேமிப்பு முதலீடுகளையும் உள்ளடக்கியது.
மேலும் கல்விக்கு குறைந்தபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் தனியாக விலக்கு அளித்தால், அது மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.
.
கருத்துகள் இல்லை