அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்ந்தது... சம்பள உயர்வு 23 % ..!
மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்திய ஆந்திர பிரதேச அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் 23.39 சதவீதமாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
சம்பள உயர்வு
ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தி, சம்பளத்தையும் 23.39 சதவீதமாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அரசாங்கத்தின் அறிவிப்புகளின் படி, இந்த மாற்றம் ஜூலை 1, 2018 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொருளாதார ஆதாயங்களான கூடுதல் சலுகைகள் ஏப்ரல் 1, 2020 முதல் தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே அரசு ஊழியர்களுக்கு 23.39 சதவீதமாக உயர்த்தப்பட்ட ஊதியம் ஜனவரி 2022 முதல் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த நடவடிக்கையால் அரசின் கருவூலத்திற்கு ஆண்டுக்கு ரூ.10,247 கூடுதல் சுமை ஏற்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இது ஆயிரக்கணக்கான மாநில அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தவிர கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) தொகையும் ஜனவரி 2022 சம்பளத்துடன் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதே போல வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகள் மற்றும் காப்பீட்டு பிரீமியங்கள் போன்ற அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் ஏப்ரல் 2022க்குள் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலத்தின் தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு ஒன்று ஜூன் 30க்குள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த இறுதி முடிவை எடுக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை