அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. தற்போது அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 2,731 பேருக்கு புதியதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஓமைக்ரான் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கையை அரசு வெளியிட்டது.
அதன்படி நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த இரவு நேரத்தில் வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் வருகிற 9 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்து சேவைகளும் இயங்காது.
இதையடுத்து இரவு நேரங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் பணிக்கு செல்லும் போது அலுவலக அடையாள அட்டை மற்றும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழையும் வைத்து இருக்க வேண்டும். அத்துடன் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வருகிற ஜனவரி 9ம் தேதிக்குள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது
கருத்துகள் இல்லை