Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தனி பேருந்து!


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கென தனியாக பேருந்துகள் இயக்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் தலைமையேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் செயல்பட்டால் 2021- 2022 ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் அரசு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, இலவச பாட புத்தகம்., சீருடை, மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று இலவச பேருந்து பயணம். பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் பேருந்து பயண அட்டை மூலம் இலவசமாக பயணம் செய்யலாம். அந்தந்த பள்ளிகள் வாயிலாக போக்குவரத்து துறை மூலம் இலவச கட்டணமில்லா பேருந்து அட்டை வழங்கப்படுகிறது.


இதனால் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு வெகு தூரம் பயணம் செய்யும் மாணவர்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவுகிறது. அரசு பேரூந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பயன் செய்கின்றனர். இந்த நேரங்களில் மக்கள் கூட்டம் பேருந்துகளில் அதிகமாக இருந்து வருகிறது காலையில் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் கூட்டமாக பேருந்துகளில் பாடப்புத்தக பைகளை கொண்டு ஏறி மிகவும் சிரமப்படுகின்றனர்.


மேலும் சில மாணவர்கள் அவசரமாக ஓடும் பேருந்திலும் ஏறுகின்றனர். இதனால் அவர்கள் உயிருக்கும் ஆபத்து நேரிடும் நிலையும் உருவாகிறது. இதனையடுத்து பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வென்பதும் என்று பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் வசதிக்காக தனியாக பேருந்து இயக்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தனி பேருந்து! அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தனி பேருந்து! Reviewed by Rajarajan on 4.1.22 Rating: 5

கருத்துகள் இல்லை