தமிழகத்தில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனுடன் சேர்த்து ஓமைக்ரான் தொற்றும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொற்று பாதித்த அனைத்து மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. தமிழகம் முழுவதும் ஜனவரி 6ம் தேதி முதல் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
2. இரவு ஊரடங்கு நேரத்தில் வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் ஹோட்டல்கள் செயல்பட அனுமதி இல்லை.
3. மாநிலத்துக்குள் இரவு ஊரடங்கு நேரத்தில் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
4. இரவு ஊரடங்கு நேரத்தில் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளான மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்றவைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
5.பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளார்களா என போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
6. அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம் , தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ATM கள் , ஆம்புலன்ஸ்,அமரர் ஊர்ந்து போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள்,எரிபொருள் வாகனங்கள் போன்றவைகள் இரவு நேரங்களில் அனுமதிக்கப்படும்.
7.பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் இயங்கும்.
8. உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கும். பணிக்கு செல்வோர்கள் ID CARD கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
9. 9.01.202 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
10. ஞாயிற்றுக்கிழமை அன்று பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் இயங்காது.
11. முழு ஊரடங்கு அன்று ஹோட்டல்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதி.
12. ஞாயிற்றுக்கிழமை அன்று மற்றும் இரவு ஊரடங்கு நேரத்தில் ரயில் ,விமானம் ,பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணிப்பவர்கள் ,பேருந்து நிலையத்திற்கு செல்ல வாடகை வாகனங்கள் மற்றும் சொந்த வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை