தமிழகத்தில் தொற்று அதிகரித்தால் ஊரடங்கு அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதனால் ஊரடங்கு கட்டாயம் அவசியம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை சற்று ஓய்ந்த பிறகு ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனை தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பின. கொரோனா இரண்டு தவணை தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து புதிய வகை வைரஸ் ஓமைக்ரான் பரவத் தொடங்கியது.
இதனை தொடர்ந்து மீண்டும் கொரோனா, ஓமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று அதிகரிப்பு கொரோனா மூன்றாம் அலையை குறிக்கிறது. மேலும் தொற்று பரவல் காரணமாக மீண்டும் பள்ளி கல்லூரிகள் ஜனவரி 31 வரை மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் நேரடி கற்றல் முறை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளான இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்றவை அமலில் உள்ளன.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஊரடங்கு பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு, “தொற்று பாதிப்பு குறைத்தால் ஊரடங்கில் தளர்வு இருக்கும், ஆனால் தொற்று பாதிப்பு அதிகரித்தால் ஊரடங்கு கட்டாயம் அவசியம்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை