பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த கொரோனா வைரஸ் அலைகள் தாக்கி மக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமிக்ரான் தொற்று பரவத் தொடங்கியது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 28,000 ஐ நெருங்கியது. கட்டுக்கடங்காமல் பரவி வரும் வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியாக அரசு இரவு நேர மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பல கட்டுப்பாடுகளை விதித்து. மேலும் பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
அதனால் மீண்டும் வீட்டிலிருந்து கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாகவே பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு விகிதம் சற்று குறைந்து வந்ததை அடுத்து அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கை விலக்கி கொண்டது. அதன் தொடர்ச்சியாக பள்ளிகளை பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கவும் அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து 1 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பிரவரி 1 முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் பிப்ரவரி 22ம் தேதி தேர்தலின் முடிவுகளும் வெளியாக உள்ளது. தேர்தலின் போது பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாக அமைக்கப்பட்டு உள்ளதாலும், ஆசிரியர்கள் தேர்தலை பணிகளில் ஈடுபடுவதால் பள்ளிகளுக்கு பிப்ரவரி 18 முதல் 22 ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை