தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு? முக்கிய தகவல்!
தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றும் அனைத்து துறை சார்ந்த ஊழியர்களுக்கும் தற்போது ஓய்வு பெறும் வயது 60 ஆக கடந்த ஆட்சியில் உயர்த்தப்பட்டது. இதற்கு முன்னர் அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. பின்னர் கடந்த 2020ம் ஆண்டு உருவான கொரோனா முதல் அலை காரணமாக அப்போது ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் தொகை வழங்கும் அளவிற்கு போதிய நிதி இல்லாத காரணத்தால் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவியதால் மீண்டும் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார். பின்னர் இது தொடர்பான அரசாணையில் இந்த அறிவிப்பு அனைத்து துறை சார்ந்த அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த உத்தரவானது கடந்த 2021 மே 31ம் தேதி ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இத்தகைய ஓய்வு பெறும் வயது நீட்டிப்பை பல அரசு ஊழியர்கள் எதிர்த்து வந்தனர். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஜன.5ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின் போது இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது. அதனால் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை