Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கொரோனா காரணமக மூடப்பட்டுள்ள பள்ளிகளை பிப்ரவரி 1 முதல் மீண்டும் திறக்க முடிவு..?

 


கொரோனா காரணமக மூடப்பட்டுள்ள பள்ளிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் திறப்பது குறித்து அமைச்சருடன் உயரதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.முதல்கட்டமாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்க ஆலோசனை.


இதனை கருத்தில் கொண்டு, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறப்பு குறித்து, பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இ்ந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகளை துறை அமைச்சரான அன்பில் மகேஷ் கவனத்துக்கு எடுத்து சென்று அவருடன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.


இந்த ஆலோசனையின்படி, பொதுத் தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதல்கட்டமாக பிப்ரவரி 1 முதல் பள்ளிகளை திறக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின்தான் இறுதி முடிவு எடுப்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டாலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்ப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமக மூடப்பட்டுள்ள பள்ளிகளை பிப்ரவரி 1 முதல் மீண்டும் திறக்க முடிவு..? கொரோனா காரணமக மூடப்பட்டுள்ள பள்ளிகளை பிப்ரவரி 1 முதல் மீண்டும் திறக்க முடிவு..? Reviewed by Rajarajan on 25.1.22 Rating: 5

கருத்துகள் இல்லை