GPay, PhonePe வழியாக இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்புவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இணைய வசதி இல்லமல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளான கூகுள் பே, போன் போ, அமெசான் பே போன்ற தளங்களில் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதற்கு 50 பைசா மட்டுமே செலவாகும். இதன் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை:
தற்போதய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்களும் தங்களை அதிக அளவில் அப்கிரெட் செய்து கொள்கின்றனர். நாம் கடந்த கொரோனா காலகட்டங்களில் பொதுமுடக்கத்தால் இணைய வசதி மூலம் வீட்டிலிருந்தபடியே அனைத்து வேலைகளையும் செய்தோம். இந்நிலையில் தன்னுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு கையில் பணம் எடுத்து செல்வதில்லை. அதற்கு பதிலாக, டிஜிட்டல் பரிவர்த்தனைகளான கூகுள் பே, போன் போ, அமெசான் பே போன்ற தளங்களில் அதிகளவில் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இன்டர்நெட் வசதி இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எப்படி மேற்கொள்வது என்பதை பார்ப்போம்.
step 1 : இணைய வசதி இல்லாமல் பணத்தை அனுப்ப விரும்புவோர், முதலில் BHIM செயலில் தங்களை பதிவு செய்து யூபிஐ கணக்கை தொடங்க வேண்டும். அந்த கணக்கில் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள சரியான தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும்.
step 2: இதனை அடுத்து, உங்களது மொபைலில் ‘*99#’ என்ற எண்ணிற்கு கால் செய்ய வேண்டும். அப்போது, பணம் அனுப்புவது, பணம் பெறுதல், பேலன்ஸ் தொகை பார்ப்பது, சுய விபரம் ,நிலுவையில் உள்ள கோரிக்கைகள், பண வரித்தனைகள் மற்றும் UPI PIN கொண்ட ஏழு விருப்பங்களைக்கொண்ட மெனு உங்கள் திரையில் தோன்றும்.
Step 3: பணம் அனுப்ப வேண்டும் என்றால், 1 என என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த முறை உங்களது UPI ID, வங்கி கணக்கு மற்றும் ஐஎஃப்எஸ்சி (IFSC) கோட் அல்லது தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கிறது.
Step 4: நீங்கள் UPI ஐ தேர்வு செய்தால், பணம் அனுப்ப வேண்டியவரின் UPI ID யை பதிவிட வேண்டும். அதேசமயம், நீங்கள் வங்கி கணக்கை தேர்ந்தெடுத்தால், பயனாளியின் கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி கோட் பதிவிட வேண்டும். ஒருவேளை, மொபைல் நம்பர் ஆப்ஷனுக்கு சென்றால், பணம் அனுப்ப வேண்டியவரின் மொபைல் எண்ணை குறிபிட வேண்டும்.
Step 5: நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை பதிவிட வேண்டும்.
Step 6: கடைசியாக உங்கள் UPI பின்ணை பதிவிட வேண்டும். தொடர்ந்து, “send” என்பதை கிளிக் செய்ய பணப்பரிவர்த்தனை முடிவடையும். உங்கள் மொபைலுக்கு உடனடியாக கன்பார்ம் மெசேஜ் வரும். எதிர்காலப் பரிவர்த்தனைகளுக்கு பயனாளியின் விவரங்களை சேமிக்க உங்களிடம் அனுமதி கேட்கப்படும். இந்த சேவையை நீங்கள் பயன்படுத்துவதற்கு 50 பைசா மட்டுமே செலவாகும்.
This mathod not possible for jio user
பதிலளிநீக்கு