தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் 2வது அலையின் தாக்கம் குறைந்து வந்தது. அதனால் மாணவர்களின் நலன் கருதி கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. அத்துடன் கடந்த நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதையடுத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் 3ம் அலை வேகமாக பரவ தொடங்கியது. அதனால் தொற்று பரவல் பொதுமக்கள் இடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் 1 முதல்12ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மேலும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பள்ளிக் கல்வித் துறையால் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கருத்துகள் இல்லை