நாளை முதல் பள்ளிகள் திறப்பு – வகுப்புகள் நேரடியாகவா? ஆன்லைனிலா? தொடரும் குழப்பம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டு வந்த பாதிப்புகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதியான இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடந்து வந்த ஆன்லைன் வகுப்புகள் இந்த சமயத்தில் நடத்தப்பட்டது. கொரோனா 3ம் அலை அதிக அளவில் குழந்தைகளை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பரவல் விகிதம் குறைந்துள்ளதால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கருத்தப்பட்டது. ஆனால் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பிப்ரவரி 1ம் தேதியான நாளை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஆனால் கொரோனா பரவல் அச்சம் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு நேரில் வருவது கட்டாயம் கிடையாது என்றும், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பள்ளி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம். பள்ளிக்கு வரும் மாணவர்கள் முழுமையாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அதன் விளைவுகளை பள்ளி நிர்வாகத்தினர் தான் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இதனால் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பள்ளிகள் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை