அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதில் மீண்டும் மாற்றம்..?
தமிழக அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் என 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 58 தான் ஓய்வு பெறும் வயதாக இருந்தது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா கால கட்டத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 வயதாக உயர்த்தி அறிவித்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பரவலின் 2ம் அலை தீவிரமடைந்தது. அதனால் மீண்டும் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது.
அதன்படி விதி 110-ன் கீழ் ஓய்வு பெறும் வயது 60 வயதாக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், சட்டரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொருந்தும். அத்துடன் 2021-ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை சிலர் வரவேற்றனர். ஆனால் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்நிலையில் நாளை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதில் அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும். இதையடுத்து ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்பட்டால் ஆயிரக்கணக்கானோர் உடனடியாக ஓய்வு பெறும் சூழ்நிலை ஏற்படும். இதனால் இவர்களுக்கு ஓய்வூதியம் உடனடியாக வழங்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது. மேலும் இதற்கு மாற்றாக அரசு பத்திரம் வழங்கும் திட்டத்தில் பரிசீலனை செய்துள்ளது. இந்த பத்திரத்தை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பணமாக மாற்றிக் கொள்ளும் வகையில் கொண்டு வர உள்ளதாகவும் அரசு வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை