சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கிய அறிவிப்பு...!
சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கிய அறிவிப்பு – மாணவர்களுக்கு ஜாக்பாட்!!
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) சார்பில் நடத்தப்படும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்ற குறிப்பிட்ட பாடத்துக்கான மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள துணை தேர்வுகள் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள்:
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும் கட்டாயம் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மே 4 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் கொரோனா காலத்தில் இந்த தேர்வுகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் அதிகம் மதிப்பெண் பெற முடியாத நிலை உள்ளது. இதனை சரி செய்யும் நோக்கில் சிபிஎஸ்இ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சிபிஎஸ்இ தேர்வுகளில் மாணவர்கள் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றால் அடுத்த ஆண்டு மட்டுமே நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற முடியும். புதிய கல்வி கொள்கையின் படி மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்களை தவிர திறன் மேம்பாடு மட்டுமே முக்கியம்.
இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக அறிய வாய்ப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மறு ஆண்டு தேர்வு வரை காத்திருக்காமல் பொதுத்தேர்வு முடிந்த உடனே துணை தேர்வு எழுதி மதிப்பெண்களை உயர்த்தி கொள்ளலாம். இந்த ஆண்டு மே மாதம் நடத்தப்படும் தேர்வு மூலமாக இந்த நடைமுறை வழக்கத்திற்கு வரும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை