ஓட்டுநர் உரிமம் பெறும் வழிமுறைகள் – மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!!
நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகள், ஓட்டுநர் உரிமம் பெற கடுமையாக்கப்பட்ட வழிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வாகன ஓட்டுநர் உரிமம் நெடுஞ்சாலைகளிலும் வேறு பல சாலைகளிலும் பல்வேறு வகையான மோட்டார் வாகனங்களை செலுத்த அதிகாரமளிக்கும் ஓர் அடையாள ஆவணம் ஆகும். பல்வேறு மாநிலங்களில் உள்ள மண்டல போக்குவரத்து அதிகாரிகள் இந்த அடையாள அட்டையை வழங்கும் பணியை செய்து வருகின்றனர். 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்ட வரையறையின் படி, எந்த ஒரு சாலைகளில் வாகனத்தை செலுத்தும் எந்த நபரும் ஓர் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் சரியான முறையில் வழங்கப்படாததால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அதனை தடுக்கும் நோக்கில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி புதிய கட்டுப்பாடுகளை தெரிவித்துள்ளனர். அதன்படி ஓட்டுநர் உரிமம் பெற கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், “ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோருக்கு தற்போது விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அவர்கள் வாகனங்களை பின்னால் இருந்து (Reverse) இயக்குவது கூட துல்லியமாக இருக்க வேண்டும். அதே போல அவர்களுக்கான மதிப்பெண் 69 சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும். மேலும் வாகன ஓட்டிகளுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்பின் தான் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க முடியும். வாகனத்தில் ரிவர்ஸ் கியர் இருந்தால் கட்டாயம் வாகனத்தை பின்னால், வலதுபுறம், இடதுபுறம் திருப்புதல் போன்றவை துல்லியமாக இருக்க வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை